Homeஇன்றைய செய்திஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரி நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும் அ.ம.மு.க., வேட்பாளர் R.சுந்தரராஜ் வாக்குறுதி

ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரி நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும் அ.ம.மு.க., வேட்பாளர் R.சுந்தரராஜ் வாக்குறுதி

ஓட்டப்பிடாரம் தொகுதியில், மருத்துவ துறையில் அதிக கவனம் செலுத்தப்படும் என, அ.ம.மு.க., வேட்பாளர் சுந்தரராஜ் கூறினார்.

ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி, தேசிய ஜனநாயக கூட்டணி அ.ம.மு.க., வேட்பாளர் சுந்தரராஜ் ஓட்டப்பிடாரம், புதுக்கோட்டை பகுதிகளில், குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். விருதுநகர் அ.ம.மு.க., மாவட்டச் செயலாளரும், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி அ.ம.மு.க., தொகுதி பொறுப்பாளருமான பயில்வான் சந்தோஷ், அ.ம.மு.க வேட்பாளர் சுந்தரராஜ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அ.ம.மு.க., வேட்பாளர் சுந்தரராஜ் கூறியதாவது:- நான் சட்டசபை உறுப்பினராக இருந்தபோது, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து கொடுத்தேன்.

ஒரு தொகுதி முன்னேற வேண்டுமெனில் மருத்துவம் முக்கியம். அதை நன்றாக புரிந்திருந்ததால், பல இடங்களில் மக்கள் சுகாதார மேம்பாடு வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தனர். ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனை, நவீன வசதிகளுடன் சிறந்த மருத்துவமனையாக தர உயர்த்தப்படும். இரவு நேரம் டாக்டர்கள் பணி அமர்த்தப்படுவர், புதுக்கோட்டை, ஓட்டநத்தம், புதியம்புத்தூர், எஸ்.கைலாசபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments